ஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டு வரை சிறை
ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றுபவர்களை கைது செய்து இரண்டு வருட சிறை தண்டனை விதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு பத்தாவது நாளை எட்டியுள்ள நிலையில் அத்தியாவசிய மற்றும் மருந்து பொருட்கள் வாங்க மட்டும் மக்கள் வெளியே வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தவறாக பயன்படுத்தி ஏராளமானோர் காரணமில்லாமல் வீதிகளில் சுற்றி வருகின்றனர்.ஊரடங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாநில தலைமை செயலாளருக்கு உள்துறை செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் ஊரடங்கு மீறி சாலையில் சுற்றுபவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் வழக்குகளை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.






