கொரோனா இருப்பவர் அருகில் இருந்தால் ‘அலார்ட்!’ செய்ய செயலி!
கொரொனா இருப்பவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள வசதியாக புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை, சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து ஆரோக்கிய சேது என்ற செயலியை உருவாக்கியுள்ளது.
சோதனைக்காக கொரொனா கவர்ஜ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இச்செயலிக்கு தற்போது ஆரோக்கியா சேது என்று பெயரிட்டு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இச்செயலின் மூலம் நமது உடல்நிலை குறித்த தகவல்களை அளித்தால் நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம்.
முக்கியமாக கொரொனா பாதிக்கப்பட்ட நபரோ தனிமைப்படுத்தப்பட்ட நபரோ நமது அருகில் இருந்தால் உடனடியாக இந்த செயலியை நம்மை எச்சரிக்கை செய்யும் வகையில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் மூலம் செயல்படும் இந்த ஆரோக்கிய சேது செயலி 11 இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
நாம் அளிக்கும் பெயர், தொலைபேசி எண் போன்ற தகவல்கள் மத்திய அரசே தவிர வேறு யாருக்கும் இந்த செயலில் தெரியப்படுத்தாது.






