மறு அறிவிப்பு வரும் வரை தமிழ் திரைப்பட சங்கம் வெளியிட்ட செய்தி..!
திரைப்படங்களின் தயாரிப்பு செலவு அதிகரிப்பு கூடுதல் நிதிச் சுமை ஏற்படுவதால் மறு அறிவிப்பு வரும் வரை புது படங்களின் வேலையை தொடங்க வேண்டாம் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் திரைப்பட தயாரிப்புக்கான நிதிச் சுமை மற்றும் சீரமைப்பு தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் 24 சங்கங்களை உள்ளடக்கிய பெப்சியின் பல யூதர்களிடம் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துள்ளதாகவும் சில யூனியன்களிடம் முழுமையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.





