--- --:--:-- --

திருமணமாகாத விரக்தி..தாய், தந்தை, மகன் தற்கொலை..!

6

நாமக்கல் அருகே திருமணம் ஆகாத விரத்தியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்தனர். ராசிபுரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் தம்பதிக்கு 40 வயதில் விமல் என்ற மகன் உள்ளார்.

 

திருமணமாகாத விரக்தியில் விமல் இருந்து வந்த நிலையில் அதிக கடன் தொல்லை காரணமாகவும் குடும்பத்தினர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.இதனிடையே விமல் தனது தாய் தந்தைக்கு குளிர்பானத்தில் ஆசீட் கலந்து கொடுத்துவிட்டு தானும் உட்கொண்டுள்ளார்.

 

பின்னர் பயத்தில் 108க்கு போன் செய்த விமல் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர் மூன்று பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விமலின் தந்தை சந்திரசேகர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவரது தாய் வத்சலாவும் உயிரிழந்துள்ளார்.

 

Right Menu Icon