--- --:--:-- --

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு..!

5

மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துவாரக்காடு பகுதியில் சாலை ஓர கடையில் விற்பனை செய்யப்பட்ட சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்ட 12 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

அதில் ஒன்பது பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு கேரளாவில் கெட்டுப்போன சிக்கனை சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon