அரசு முறை பயணமாக ரஷ்யா புறப்பட்டு செல்லும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..!
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா புறப்பட்டார். பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகளும் அவருடன் சென்றனர்.
மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். அத்துடன் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சோக்குவை தனியாக சந்தித்து இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
சீனாவுடன் முரண்பாடுகள் முற்றி வரும் நிலையில் அங்கு மாநாட்டில் பங்கேற்க வரும் சீன பாதுகாப்பு அமைச்சரை ராஜ்நாத்சிங் தனியாக சந்திக்க மாட்டார் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.







