கோவையில் இன்று மாலை முதல் தளர்வுகளற்ற பொதுமுடக்கம்..!
கோவையில் இன்று மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை தளர்வுகள் இல்லாத முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது வரை நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து நெருங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் கடைபிடிக்கப்படும் நிலையில் முந்தைய நாள் மாலை 5 மணியிலிருந்து தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை காலை 6 மணி வரை நீடிக்கும் இந்த முழு முடக்கத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.






