சிறுநீர் கழிக்க முடியாமல் தேர்வு அறையில் மாணவிக்கு ஏற்பட்ட கொடுமை..!
செங்கல்பட்டில் உள்ள சட்ட கல்லூரியில் தேர்வு நேரத்தின் பொழுது சிறுநீர் கழிக்க கழிவறை செல்ல வேண்டும் எனக் கூறிய மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வருகிற இரண்டு மணி அளவில் கல்லூரி தேர்வுக்கு வந்தவர் சிறுநீர் கழிக்க கழிவறை செல்ல வேண்டும் என தேர்வறை அதிகாரியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த அதிகாரி நீங்கள் சென்றால் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஒப்புதல் சான்றிதழ் வாங்கி தான் சிறுநீர் கழிக்க செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அவருக்கு பாதிப்பு ஏற்பட இதன் காரணமாக தேர்வை பாதியில் நிறுத்திவிட்டு வெளியே வந்து விட்டார். இதற்கு கல்லூரி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.





