--- --:--:-- --

மலைவாழ் மாணவர்கள் தங்கும் விடுதியில் உதயநிதி ஆய்வு..!

6

லகிரி மலை அரசின் மலைவாழ் மாணவர்கள் தங்கும் விடுதியில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

 

ஜவ்வாது மலை, ஏலகிரி மலைப்பகுதி மாணவர்கள் அரசூர் மலைவாழ் மாணவர்கள் தங்கும் விடுதியில் இயங்குகிறது. அரசு மலைவாழ் அரசினர் மலைவாழ் மாணவர்கள் தங்கும் விடுதி கழிப்பிடம் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் பராமரிப்பின்றி இருப்பதாக புகார் எழுந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்கள் விடுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அடிப்படை பராமரிப்பு பணிகள் செய்வதற்காக 2 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டார்.

 

Right Menu Icon