கோவையில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு..!
கோவை தடாகம் அடுத்த பகுதியில் செங்கல் சூளைக்கு வந்த மலைப் பாம்பை கண்ட சிலர் வனத்துறைக்கும், பாம்பு பிடி வீரருக்கும் தகவல் அளித்தனர்.
அந்த பகுதிக்கு வந்த வனத்துறையினர் மற்றும் பாம்பு பிடி வீரர் விக்னேஷ் குமார் பத்தடி நீளம் மலைப்பாம்பை பைக்குள் லாவகமாக பிடித்து வனத்தில் கொண்டு சென்று விடுவித்தனர்.





