மூடநம்பிக்கையால் சுடுகாட்டிற்கு சென்று இளம் பெண்ணின் உடலை சாப்பிட்ட இருவர்..!
ஒடிசாவில் சுடுகாட்டிற்கு சென்று எரிந்த உடலை சாப்பிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனையில் இறந்த 25 வயதான இளம் பெண்ணின் உடல் மந்தா சாலை கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
சடலம் எரியூட்டப்பட்ட சில நிமிடங்களில் நரேந்திர சிங் மற்றும் மோகன் சிங் என்று இருவர் சடலத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவர்களின் செயலால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் மோகன் மற்றும் நரேந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கினார்.
மேலும் இருவரையும் மின்கம்பத்தில் கட்டி வைத்துவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இந்த போலீசார் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் இறந்த இளம் பெண் மதுசாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்.
இருவரிடமும் போலீசார் விசாரித்ததில் திருமணமாகாத பெண்ணின் இறைச்சியை உட்கொள்வது தங்களது சக்தியை மேம்படுத்தும் என்றும் அதனால் சடலத்தை சாப்பிட்டதாகவும் இருவரும் கூறினார்.






