பள்ளிபாளையத்தில் வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு..!
பள்ளிபாளையத்தில் பட்டாசு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 9 மணிக்கு பள்ளிபாளையம் அருகே உள்ள பகுதியில் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தினால் தீவிபத்து ஏற்பட்டு தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெடி விபத்து காரணமாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் இருளில் சூழப்பட்டிருந்தது.
வெடி விபத்து ஏற்பட்டதால் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டை சுற்றியுள்ள 5 வீடுகள் சேதமடைந்துள்ளன.






