--- --:--:-- --

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்..!

4

துரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தியதை தொடர்ந்து மருதுபாண்டியர்களின் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

 

இந்த நிலையில் மதுரையில் தங்கியிருந்த அவர் காலையில் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆர் வி உதயகுமார், செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தனர்.

Leave a Reply

Right Menu Icon