தோசை வர தாமதம் ஆனதால் சப்ளையரின் காதை அறுத்த இருவர்..!
ஆர்டர் செய்த தோசையை மற்றவருக்கு வைத்த ஹோட்டல் சப்ளையரை அரிவாளால் வெட்டியதில் அவரது காதுகளை அறுத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் எப்படி தோசை செய்தாலும் ஓட்டலுக்கு செல்லும் போது பொன்னிறத்தில் முழுதாகக் காட்சியளிக்கும் தோசை தான் பலருக்கும் பிரியம்.
அப்படி விரும்பி சாப்பிடும் தோசை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தவர்கள் தான் குமாரும் சிவாவும். நாகையை அடுத்த வெளி பாளையத்தில் திரையரங்குக்கு படம் பார்க்கச் சென்றவர்கள் அதற்கு முன்பாக சாப்பிட வந்துள்ளனர். தோசை எப்போது வரும் எப்போது வரும் என்று காத்திருந்த நேரத்தில் தோசை அடுத்த டேபிளுக்கு சென்றது.
அதற்கு மேல் பொறுமை கற்காமல் சப்ளையர் பாஸ்கரனிடம் சண்டைக்கு சென்று விட்டனர். இருவரும் வாக்குவாதத்தில் இறுதியில் கத்தியால் சப்ளையர் பாஸ்கரனின் காதில் வெட்டியதில் ரத்தம் கொட்ட அவர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய வெளிப்பாளையம் காவல்துறையினர் குமாரையும் சபையும் கைது செய்தனர்.






