--- --:--:-- --

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற இரண்டு பேர் கைது! கோவை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடி !!!

3

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை மாத்திரை,போதை மருந்து தடவிய ஸ்டாம்ப் வடிவிலான அட்டையில் விற்பனை செய்வதாக கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

அதன்போில் கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவிநாசி ரோடு பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது,அங்கு சந்தேகப்படும்படி சுற்றிய இரண்டு பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

இது சம்மந்தமாக கோவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வின்சன்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில் போதை மாத்திரைகள், போதைப்பொருள்கள் தடவிய ஸ்டாம்ப் வடிவிலான அட்டைகள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தோம். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த தீபக் ( வயது 23 ), மற்றொருவர் பாலக்காடு சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஜித் ( வயது 21 ) என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து எம்.டி.எம்.ஏ போதை மாத்திரைகள் 200 மில்லி கிராம் மற்றும் ஸ்டாம்பில் போதை மருந்து தடவப்பட்ட 20 அட்டைகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும், அதன் சர்வதேச மதிப்பு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு எனவும் தெரிவித்தார்.கோவாவில் இருந்து இவற்றை கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளதும் தெரிய வந்தது.

கடந்த ஆண்டு மே மாதம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு தென்னந்தோப்பில் கல்லூரி மாணவர்கள், தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் உள்பட 163 பேர் போதை மருந்து பயன்படுத்தி உல்லாசமாக இருந்தனர்.அப்போது,கோவை மாவட்ட எஸ்.பி சுஜித் குமார் தலைமையில் திடீர் சோதனை நடத்தியபோது தீபக்கும்,ஸ்ரீஜித்தும் தப்பி ஓடிவிட்டதாகவும், தற்போது இவர்களை இருவரையும் கைது செய்துள்ளதாகவும்,எம். டி.எம்.ஏ என்ற இந்த போதை மருந்தை உட்கொள்பவர்களுக்கு 6 மணி நேரம் போதை இருக்கும் என்றும், சிறுநீரகம்,கல்லீரல் பாதிக்கப்பட செய்வதுடன் இதய அடைப்பை ஏற்படுத்தும் தன்மை உடையது எனவும்,இந்த போதையை அடிக்கடி உட்கொள்பவர்கள் மூளை கோளாறினாலும் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon