ராம்குமார் மரணம் அடைந்த வழக்கில் திருப்பம்..!
2016 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற இளம் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராம் குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த ராம்குமார் மின்சார வயர்களை கடித்து உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மறு விசாரணை செய்ய வேண்டும் எனவும் கூறி ராம்குமார் தரப்பில் மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூலை மாதம் முதல் மனித உரிமை ஆணையத்தின் விசாரணை நடைபெற்று வருகிறது.
ராம்குமார் சிறையில் இருக்கும்போதே மரணமடைந்துவிட்டதாக சிறைத்துறை மருத்துவரின் சான்று மனித உரிமை ஆவணத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிறைத்துறை மருத்துவர் தாக்கல் செய்துள்ள ஆணையம் தற்பொழுது வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






