--- --:--:-- --

பெண் நிருபரின் அடுக்கடுக்கான கேள்வியால் கோபத்துடன் வெளியேறிய டிரம்ப்

5

அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் நிருபர் ஒருவர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். வாஷிங்டன் நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது மற்ற நாடுகளை காட்டிலும் கொரொனா வைரஸை அமெரிக்கா சிறப்பாக கட்டுபடுத்தி வருவதாக கூறி வரும் நிலையில் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழப்பது ஏன் என்று அதிபர் டிரம்பிடம் பெண் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

 

பல்வேறு நாடுகளிலும் உயிரிழப்புகள் நிகழ்வதாக பதிலளித்த ட்ரம்ப் இதுகுறித்து சீனாவிடம் கேளுங்கள் என்று கூறினார். ஆனாலும் அந்த பெண் செய்தியாளர் விடாமல் கேள்விகளை அடுக்கியதால் செய்தியாளர் சந்திப்பில் இருந்து அதிபர் டிரம்ப் பாதியிலேயே வெளியேறினார்.

Leave a Reply

Right Menu Icon