--- --:--:-- --

கொடைக்கானலில் கனமழையால் வேரோடு சாய்ந்துள்ள மரங்கள்

15

கொடைக்கானல் பகுதியில் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்த்து உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கொடைக்கானல் பகுதியில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

 

இதன் காரணமாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் சாலைகளில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

 

கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் பாதுகாப்பு கருதி மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon