தனியார் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம்..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேத்தமங்கலம் வழியாக நாமக்கல் நோக்கி தனியார் பேருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது சில பயணிகள் ஆபத்தை உணராமல் படியிலும் பின்புறத்திலும் தொங்கியவாறு பயணம் செய்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.





