--- --:--:-- --

தண்ணீர் அடித்து மாணவியை அவமானப்படுத்திய போக்குவரத்து ஊழியர்கள்..!

3

பேருந்து இயக்கம் தொடர்பாக புகார் அளிக்கும் போது போக்குவரத்து கழக ஊழியர்கள் தண்ணீர் அடித்து அவமரியாதை செய்ததாக மாணவி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். திருநெல்வேலி மாநகரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் மாணவியின் வீடு கிராமம் அமைந்துள்ளது.

 

இங்கு உள்ள பாளையங்கோட்டை திருநெல்வேலி பகுதிகளில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயில வருகை தருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே வருவதாக குற்றம் சாட்டி அந்த பகுதி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஒரு நாளைக்கு 35 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஒரே ஒரு பேருந்து மட்டுமே அந்த பகுதிகளில் இயக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

 

இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு பள்ளிக்கு சென்று வருவதற்கு ஏதுவாக புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

 

Right Menu Icon