நேருக்கு நேர் மோத இருந்த இரண்டு விமானங்கள்..!
நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேராக மோத இருந்த ஆபத்தான சம்பவத்தில் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிகள் பெரும் விபத்தை தவிர்த்தனர். இந்த சம்பவத்தின்போது முதுகிலும் நெஞ்சிலும் பலத்த காயம் அடைந்ததாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜியின் தனி விமானம் வாரணாசியில் இருந்து கொல்கத்தாவிற்கு புறப்பட்ட பொழுது எதிரே வேறு ஒரு விமானம் வந்ததால் விமானி துரிதமாக செயல்பட்டு வேகத்தைத் குறைத்ததாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
ஆனால் விமானம் திடீரென கீழ் நோக்கி செல்வதால் தூக்கி எறியப்பட்டு காயம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.





