--- --:--:-- --

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு..!

4

ளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென் மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு குறைந்தது. இதனை அடுத்து மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon