--- --:--:-- --

உருமாறும் கொரோனாவால் மூன்றாவது பூஸ்டர் டோஸ் அளிக்க வேண்டிய தேவை ஏற்படும்..!

9

ருமாறும் கொரோனாவால் மூன்றாவது பூஸ்டர் டோஸ் அளிக்க வேண்டிய தேவை ஏற்படக்கூடும் என டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரொனா இரண்டாவது அலை முதல் அலையை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.

 

கடந்த சில வாரங்களாக பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இதைப் பயன்படுத்திக்கொள்ள தடுப்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். எனவே புதிது புதிதாக உருமாறிய கொரொனா தொற்றுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனால் பிரிட்டன் போன்ற நாடுகள் பொதுமக்களுக்கு மூன்றாவது பூஸ்டர் டோஸ் அளிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். போஸ்டர் டோஸ் பற்றி பேசிய இயக்குனர் பொதுமக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது பூஸ்டர் டோஸ் நமக்கு தேவை எனவும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது அதனை பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார்.

 

நாட்டில் அனைவருக்கும் இரண்டு டோஸ் செலுத்தப்பட்ட பின் பூஸ்டர் செலுத்தும் பணி தொடங்கப்படும் எனவும் இந்த ஆண்டு இறுதிக்குள் பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon