--- --:--:-- --

மனைவி கண்முன்னே கணவர் உயிரிழந்த சோகம்..!

7

ர்நாடகாவில் என்ஜினில் சப்தம் கேட்டதால் காரை சாலையோரம் நிறுத்தி பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் மனைவி இரண்டு குழந்தைகள் கண் முன்னே கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து சுரேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெங்களூரு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். மங்களூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சீர்காழி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென இன்ஜினில் இருந்து சத்தம் வந்துள்ளது.

 

இதனைத் தொடர்ந்து காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கிய சுரேஷ் என்ஜின் மூடியைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது கார் அருகே இருந்த மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் எதிர்பாராதவிதமாக தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே பலியானார்.

 

தகவலறிந்து வந்த போலீசார் சுரேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon