--- --:--:-- --

விபத்தில் குழந்தைகள் கண் முன்னே தாய் உயிரிழந்த சோகம்..!

5

ஞ்சாவூரில் இருசக்கர வாகனத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய் லாரி மோதியதில் உயிரிழந்தார். சுந்தர நகர் பகுதியில் சேர்ந்த செரீனா பேகம் என்பவர் தனது இரு குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

 

அப்பொழுது ரெட்டிபாளையம் சாலையை கடக்கும் பொழுது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே தாய் சரினா பேகம் உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு குழந்தைகளையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

 

பள்ளிகள் அதிகம் இருப்பதால் வேகத்தடை அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் அதனை அமைக்காததாலயே விபத்து நேரிட்டதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon