--- --:--:-- --

நடைபாதையில் தடுக்கி விழுந்த மாணவி.. வைரல் வீடியோ..!

6

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியின் 19 ஆவது வார்டு பகுதியில் நடை பாதை ஆங்காங்கே சேதமடைந்துள்ளதால் நடந்து செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.

 

நடைபாதையில் சிமெண்ட் பள்ளம் உடைந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருந்துள்ளது. சில நாட்களுக்கு முன் பள்ளி சிறுமி ஒருவர் நடைபாதையில் இருந்த பள்ளத்தில் தடுக்கி விழுந்துள்ளார்.

 

அதே நேரத்தில் நடை பாதையில் தொட்டியில் செடி வைத்திருப்பதும் சிரமத்தை தருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். நடைபாதை ஆக்கிரமிப்பை தடுக்கவே தொட்டிகளில் செடிகள் வைக்கப்பட்டுள்ளதாக பூந்தமல்லி நகராட்சி ஆணையர் லதா தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon