நா.த.க.வில் இருந்து விலகுவோர் வி.சி.க வருவதில்லை – திருமாவளவன்
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவோர் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வருவதில்லை. மாநில சுயாட்சியும் சாதி ஒழிப்புமே வி.சி.க மாநாட்டின் இலக்கு.
தமிழ் தேசியம் பேசுவோர் தமிழரான என் கட்சிக்கு ஏன் வருவதில்லை? நா.த.க-வில் இருந்து விலகுவோர் வி.சி.க-வுக்கு வருவதில்லையே ஏன்? தமிழ் தேசியம் பேசும் சிலர் சாதி ஒழிப்பு பேசுவதில்லை, சாதி முரணே அவர்களை தடுக்கிறது என்று வி.சி.க நடத்தும் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டின் நோக்கம் பற்றி மதுரையில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசினார்.






