புத்தாண்டுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு..!
2024 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் நிலையில் இன்று முதல் பெரிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. பயனாளிகளின் பயோமெட்ரிக் விவரங்களை சரிபார்க்கப்பட்ட பிறகே இனி சிம் கார்டுகள் வாங்க முடியும். புதிய சிம்கார்டு வாங்குவது வாடிக்கையாளர்கள் இனி காகித படிவங்களில் நிரப்ப தேவையில்லை.
இதற்கு பதிலாக டிஜிட்டல் கேஒய்சி. கட்டாயம் 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான குறிப்பிடப்பட்ட ஐடி தாக்கல் செய்ய நேற்றே கடைசி நாளாக இருந்த நிலையில் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்வதற்காக கால அவகாசம் முடிந்ததையடுத்து இன்று முதல் அபராதம் விதிக்கப்படும்.
அதாவது வரி செலுத்துபவரின் வருமானம் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். அதே சமயம் வருமான ஐந்து லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் அபராத தொகை ஆயிரம் ரூபாயாகும்.





