விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!
சென்னையில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர் இவர். அருகில் உள்ள அரசு பள்ளியில் உதவியாளராக வேலை செய்து வரும் நிலையில் அவரது மகன் தினேஷ்குமார் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனால் தாய் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






