--- --:--:-- --

சீரியல் நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய அரசியல் பிரமுகர்..!

3

சின்னத்திரையில் வெளியான பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தவர் சித்து என்கிற விஜே சித்ரா. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

தற்கொலைக்கு அவரது கணவர் தான் காரணம் என கைது செய்யப்பட்டு பின்னர் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தன் கணவர் கடந்த 25ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

 

அந்த புகாரில் தனது மனைவியான சித்ராவும் தானும் மிகுந்த அன்புடன் இல்லற வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது சின்னத்திரை பிரபலங்கள் அனைவருக்கும் தெரியும் என்பதை குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தனது மனைவி சித்ரா தற்கொலை செய்து கொண்ட போது தானும் தனது வாழ்வை முடித்துக் கொள்ள எண்ணியதாகவும், ஆனால் தனது மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக தன் மீது சேற்றை வாரி இறைத்துவர்கள் முன் தான் குற்றமற்றவன் என நிரூபிக்கவே இன்னும் உயிரோடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் தன் மனைவியின் தற்கொலைக்குப் பின்னால் பண பலமும், அரசியல் பலமும் உள்ள மாபியா கும்பல் இருப்பது பலருக்கு தெரிந்த உண்மை. எனினும் அவர்களுக்கு பயந்து அதை வெளியில் கூற அனைவரும் தயங்குவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

 

அதுமட்டுமில்லாமல் அவர்களின் பண பலத்திற்கு முன்னால் தன்னை போன்ற சாதாரண மனிதனால் எதுவும் செய்ய இயலாது எனவும் அப்படிச் செய்தாலும் தனது மனைவி தனக்குத் திரும்பக் கிடைக்கப் போவதில்லை என்பதை தானும் உணர்ந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon