--- --:--:-- --

சமூக சேவை விருது பெற்றவர்கள் கஞ்சா விற்பனை..!

5

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக சேவை விருது பெற்றவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 

இதனடிப்படையில் போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த முகமது, முகமது நசுருதின், அகமது அசாருதீன் மற்றும் வாசிம்கான் ஆகிய நால்வரை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் இரட்டையர்களான முகமது நசுருதீன் மற்றும் அகமது அசாருதீன் ஆகியோருக்கு சமூக அமைப்புகள் சார்பில் பல்வேறு சமூக சேவை விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக சேவைகள் செய்து சமுதாயத்தில் நற்பெயர் பெற்றவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon