--- --:--:-- --

இன்றைய தங்கம் விலை..!

5

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்கிறது. அந்த வகையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,120க்கும், சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் 1,04,960க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,170க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,980க்கும் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் ஒரே நாளில் அதிரடியாக கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.292க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,92,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon