இன்று தேசிய கடல்சார் தினம்..!
தேசிய கடல்சார் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றும் கடல்சார் துறையை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5 ஆம் தேதி கடல்சார் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1919ல் இதே நாளில் தான் இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் எஸ்.எஸ்.லாயல்டி மும்பையில் இருந்து லண்டனுக்கு சென்றது. அதன் நினைவாக 1964 முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.






