பிரபல நடிகர் விலாஸ் உஜ்வானே காலமானார்!
பிரபல, இந்தி, மராத்தி நடிகர் விலாஸ் உஜ்வானே(62) காலமானார். சினிமா, சீரியல்கள், மேடை நாடகங்களில் தனது ஆசாத்திய நடிப்பு, கம்பீர குரலால் மக்கள் மனதை கொள்ளை கொண்ட அவர், 2017இல் Brain Strokeஆல் பாதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் பல்வேறு உடல்நல பிரச்னைகளை சந்தித்து வந்த நிலையில், மும்பையில் திடீரென உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.






