மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!
சூறைக்காற்று வீசி வருவதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
மேலும் பலத்த காற்று வீசி வருவதால் ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி உதகை, குன்னூர், கோத்தகிரி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே கன மழை காரணமாக அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் தற்போது பலத்த காற்றின் காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது.





