--- --:--:-- --

தங்கம் வாங்கப்போறீங்களா? மீண்டும் விலை இறங்குமுகம்! 8 மாதங்களில் ரூ.9,456 சரிவு!

Gold 03

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை மீண்டும் குறைந்து, ஒரு சவரன் ரூ.34,000-க்கும் கீழே சென்றது. கடந்த எட்டு மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.9,456 வரை குறைந்துள்ளது.

 

சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. எனினும், கொரோ வைரஸ் தாக்கத்தின் காரணமாக, தொழில்துறை தேக்கம் குறித்த அச்சம் நிலவி வந்தது. இதனால், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை குறையத் தொடங்கியது.

 

அத்துடன், 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்திருந்த நிலையில் இன்று மீண்டும் அதன் விலை சரிந்துள்ளது.

 

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ. 33,904 ஆக விற்பனையாகி வருகிறது; ஒரு கிராம் தங்கம் ரூ.4,238-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை இன்று கிலோவுக்கு ரூ.1200 குறைந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த 8 மாதங்களில் சவரனுக்கு ரூ.9,456 வரை குறைந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon