“காமராஜ் ஒரு சகாப்தம்” என்ற நூலுக்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் 10 லட்சம் ஒதுக்கீடு..!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், மாநில ஊடகப்பிரிவின் தலைவருமான ஆ.கோபண்ணா எழுதிய “காமராஜ் ஒரு சகாப்தம்” என்ற நூலுக்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த நூலானது மேல்நிலைபள்ளிகள், கல்லூரி, நூலகம், மருத்துவக் கல்லூரி, கால்நடைகள் கால்நடை பயிற்சி கல்லூரி, உள்ளிட்ட பலதுறைக்கு நூல்கள் சென்றடைந்து மாணவர்கள் படித்து வருகிறார்கள். இளையசமூகம் பயணடையும் இந்த நல்ல முயற்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்த திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயனுக்கு திருப்பூர் பகுதி காமராஜ் நினைவு மன்றம் சார்பாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி மங்கலம் ஊராட்சி A.G.புத்தூரில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் வே.முத்துராமலிங்கம்,
சி.பி.ஐ கட்சியின் முன்னால் எம்.எல்.ஏ. நா.பெரியசாமி, காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பழனிச்சாமி,
மங்கலம் ஊராட்சி காங்கிரஸ் கட்சி தலைவர் சபா.துரை, சாந்தி நிறுவனங்களின்த் தலைவர் M.திருமூர்த்தி, சின்னாண்டி பாளையம் சுவாதி R.சோமசுந்தரம், காமராஜ் நினைவு மன்றத்தின் தலைவர்கள் திருமலா கண்ணன், எபிசியண்ட் மணி, M.நடராஜ், மெம்பர் துரை, அப்துல் அஜீஸ், வாவிபாளையம் புதிய தடம் கே.சுந்தரமுத்து, மு.வேலுச்சாமி,
தேசிய சிந்தனையாளர் டிப்டாப் மு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.






