தபால் வாக்கு தொடர்பாக திமுக தொடர்ந்துள்ள அவசர வழக்கு இன்று விசாரணை..!
தபால் ஓட்டு செலுத்துவோரின் பட்டியலை வழங்காமல் தபால் வாக்குகள் பெறும் தேர்தல் ஆணைய நடைமுறையை எதிர்த்து திமுக தொடர்ந்துள்ள அவசர வழக்கை இன்று விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், கொரொனா பாதித்தவர்களும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தபால் மூலம் வாக்களிக்க உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் தொகுதிவாரியான பட்டியலை வழங்க கோரி திமுக முதன்மை செயலாளரும், எம்எல்ஏவுமான கே என் நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு தொகுதிவாரியாக தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை மார்ச் 29ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அரசியல் கட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தபால் வாக்கு செலுத்துவோரின் பட்டியல் கொடுக்கப்படாத நிலையில் தபால் வாக்குகளை தேர்தல் ஆணையம் பெற தொடங்கியுள்ளதாக திமுக சார்பில் அவசர முறைகேடு மேற்கொள்ளப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்று இந்த வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.






