--- --:--:-- --

திருப்பூர் கம்யூனிஸ்ட் வேட்பாளர் 1,24,869 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..!

7

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் 28 சுற்றுக்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்று 28 முடிவில், இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன் 4,70,195 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

 

அதிமுக வேட்பாளர் பி. அருணாச்சலம் 3,45,326 வாக்குகள் பெற்று 2ம் இடமும், பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் 1,84,066 வாக்குகள் பெற்று 3 ம் இடமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கே சீதாலட்சுமி 95,250 வாக்குகள் பெற்று 4ம் இடமும் பெற்றுள்ளனர்.

மேலும் சுயேட்சை வேட்பாளர்களில் வேலுசாமி 7089 வாக்குகளும், பழனி 6013 வாக்குகளும், சதீஷ்குமார் 23 15 வாக்குகளும், ஜனார்த்தனன் 1861 வாக்குகளும், குமார் 1752 வாக்குகளும், செங்குட்டுவன் 1560 வாக்குகளும், சுப்பிரமணி 1341 வாக்குகளும், மலர்விழி 1311 வாக்குகளும், கார்த்திகேயன் 810 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் 17,554 வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்துள்ளது.

 

இந்திய கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் 1,24,869 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon