திருப்பூர் : சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர்கள் கைது.
திருப்பூர் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நொச்சிபாளையம் பிரிவு டாஸ்மாக் பார் அருகே 18.08.2025-ம் தேதி சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மேற்கண்ட இடத்தில் நல்லூர் காவல் நிலைய போலீசார் சோதனை செய்த போது சூரிய பிரகாஷ்(23) என்ற நபர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. மேற்படி எதிரி மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த 180 ML அளவுள்ள 29 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





