திருப்பூர் ஏ.கே ஆர் அகாடமி சி.பி.எஸ்.இ பள்ளி மாணவி மஹா ஸ்வேதாவுக்கு சர்வதேச சிறந்த குழந்தை நட்சத்திர விருது..!தாளாளர் லட்சுமி நாராயணன் கைக்கடிகாரம் வழங்கி பாராட்டு..!
திருப்பூர், திருமுருகன்பூண்டி, அணைப்புதூரில் செயல்பட்டு வரும் ஏ.கே ஆர் அகாடமி ( சி.பி.எஸ் இ ) பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வரும் மாணவி மஹாஸ்வேதா “கிரேண்ட்மா டாய் ” என்ற மலையாள குறும்படத்தில் நடித்துள்ளார்.
இச்சிறுமி அம்மா வீடு என்ற பெண்கள் முதியோர் காப்பகத்தில் தங்கி அவர்களுக்கு சேவை செய்யும் கதாபாத்திரமாக நடித்தார்.
அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் – ல் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து போட்டியில் கலந்துகொண்ட குறும்படங்களில் இவர் நடித்த “கிரேண்ட்மா டாய் ” என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலம் சர்வதச சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருது கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து சர்வதேச அளவில் சிறந்த குழந்தை நட்சத்திரமாக விருது பெற்ற ஏ.கே.ஆர் அகாடமி ( சி.பி.எஸ் இ ) பள்ளி மாணவி மஹாஸ்வேதாவுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
விழாவுக்கு பள்ளி முதல்வர் மணிமலர் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் லட்சுமி நாராயணன் சர்வதேச அளவில் சிறந்த குழந்தை நட்சத்திர விருது பெற்ற மஹாஸ்வேதாவுக்கு கைக்கடிகாரம் பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள், பள்ளி அலுவலர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.






