திருப்பூர் : பூண்டி அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா..!
திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா, உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வக துவக்க விழா, மன்றங்கள் தொடக்கம் மற்றும் மாணவர்கள் பொறுப்பு ஏற்பு விழா என முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

விழாவில் 20 கம்ப்யூட்டர்கள் அடங்கிய உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தை திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் நா.குமார், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் கோ மணிவண்ணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த கர்மவீரர் காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து மன்றங்கள் தொடக்க மற்றும் மாணவர்கள் பொறுப்பு ஏற்பு விழாவில் ஐவகை நிலங்கள் அடங்கிய மகிழ் முற்றம் துவக்க விழா, இலக்கிய மன்றம், வானவில் மன்றம், கணித மன்றம், ஆங்கில மன்றம் துவக்க விழாவும், இதனைதொடர்ந்து உறுதிமொழியும் ஏற்றனர். பின்னர் ஜே.ஆர்.சி, என்.சி.சி, சாரண- சாரணியர் இயக்கம் தொடக்க விழாவும், உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.
தொடர்ந்து திருமுருகன் ரோட்டரி சங்கத்தின் இன்டிராக்ட் கிளப்பின் புதிய தலைவராக ஃ பஹீமா பர்வின் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்று உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து நடந்த முப்பெருவிழாவின் பாராட்டு விழாவுக்கு திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் நா.குமார் தலைமை தாங்கினார்.

அவிநாசி வட்டார கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, பூண்டி நகராட்சி துணைத் தலைவர் ராஜேஸ்வரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈஸ்வரி, முன்னாள் மாணவர் பேரவை தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியை கவிதா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் பீ.ராமகிருஷ்ணன், குளம் காக்கும் அமைப்பு தலைவர் டி.என்.துரை, அவிநாசி அறிவுச்சுடர் அறக்கட்டளை தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவினை முன்னிட்டு மாணவிகளின் பரதம் நிகழ்ச்சியும், 5 ஆம் வகுப்பு மாணவிகள் லக்ஷனா, விவிதா, 8 ஆம் வகுப்பு மாணவி ஜனனி ஸ்ரீ ஆகியோர் காமராஜர் புகழ் குறித்து விளக்கி பேசினார்கள். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் கோ மணிவண்ணன், திருமுருகன் ரோட்டரி சங்கத் தலைவர் சார்லஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

முடிவில் தமிழ் ஆசிரியை செந்தாமரைச்செல்வி நன்றி கூறினார். விழாவுக்கான நிகழ்ச்சிகளை பட்டதாரி ஆசிரியர்கள் முத்துக்குமார், சக்திவேல், இடைநிலை ஆசிரியர் சுரேஷ்குமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர்கள், பூண்டி நகராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் மாணவர் பேரவை பொறுப்பாளர்கள், பள்ளி மேலாண்மைக்குழு பொறுப்பாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்





