--- --:--:-- --

தடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு வழங்கப்படும்..!

4

மெரிக்காவின் அனைத்து மாகாண அரசுகளும் தடுப்பு ஊசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு வழங்குமாறு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் தடுப்பூசி போடும் நபர்களுக்கு 100 டாலர் பரிசு என்று மாநகர மேயர் அறிவித்திருந்தார்.

 

இதனை அனைத்து மாகாணங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிபர் ஜோ பிடன் கொரொனாவுக்கு எதிரான யுத்தம் தொடர்வதாக தெரிவித்தார். புதிய சவால்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

அமெரிக்காவில் அனைத்து அரசு ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கட்டாயம் முக கவசம் அணியும் படிக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon