செல்போனில் சீரியல் பார்த்தபடி இரு சக்கர வாகனம் ஒட்டிய நபர்..!
கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் ஆபத்தை உணராமல் இளைஞர் ஒருவர் செல்போனில் சீரியல் பார்த்தபடி இரு சக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதனை சக வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







