முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம்.!
தமிழகத்தில் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவலை தடுப்பதற்கு பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவதற்கு மருத்துவத் துறை நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பொது இடங்களில் முக கவசம் அணிவதை உறுதி செய்யும் வகையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை முக கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முக கவசம் அணியாவிட்டால் அபராதத் தொகையை 500 ரூபாயாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகை காலத்தில் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.





