ஞாயிறு முழு ஊரடங்கில் எவற்றிற்கெல்லாம் அனுமதி.?
வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது மருந்து மற்றும் பால் டெலிவரி செய்ய மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மின் வணிக நிறுவனங்கள் மருந்துகள் மற்றும் பால் மட்டும் டெலிவரி செய்ய போலீசார் அனுமதி நல்குவர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கின் போது காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.





