இந்தியாவில் இரண்டாவது அலை பரவ இதுவே காரணம்..!
டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என்று உருமாறிய கொரொனா வைரஸ் வேறுபாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வைரஸ் இந்தியாவில் இரண்டாவது அலை பரவியது.
பல்வேறு நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்புக்கு டெல்டா வைரசே காரணமாகும். டெல்டாவில் இருந்து உருமாறியது டெல்டா பிளஸ் வைரஸ். இவை இரண்டும் வேறுபடுகிறது. ஆசியா, ஐரோப்பா, அமெரிக்காவில் 9 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.
வைரஸ் குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை தான் முதன்முறையாக ஜூன் 11ஆம் தேதி அறிவித்தார். தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மிக குறைந்த எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் 3வது அலை பரவ காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.






