தமிழ்நாட்டில் ஒருவருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் கொரொனா பாதிப்பு..!
தமிழ்நாட்டில் ஒருவருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தொற்று உறுதியானவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இடம் சென்னை என்பதால் அவர் சென்னையை சேர்ந்தவர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டவர் எந்த பகுதியை சேர்ந்தவர் வேறு யாருக்கேனும் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று உள்ளதா என்பதை வேகமாக கண்டறியும் பணிகள் தொடங்கியுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.







