--- --:--:-- --

திருக்குறள் எழுதியது ஒளவையார் பாஜக எம்.எல்.ஏ கூறியதால் அரங்கத்தில் சிரிப்பலை..!

3

புதுச்சேரியில் நடைபெற்ற சட்ட நாள் விழாவில் திருக்குறளை எழுதியது ஔவையார் என்று பாஜக எம்எல்ஏ அசோகன் பேசியதால் சிரிப்பலை எழுந்தது. புதுச்சேரியில் 72வது சட்ட நாள் 100 அடி சாலை தனியார் உணவகத்தில் நடைபெற்றது.

 

புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தலைமை நீதிபதி செல்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுச்சேரி முதலமைச்சரும், பிரதமரும் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் எனவும் இருவரும் ஞானிகள், தீர்க்கதரிசிகள் எனவும் தெரிவித்தார்.

 

நாட்டு மக்களின் நலம் தவிர இருவருக்கும் வேறு சிந்தனைகள் கிடையாது எனக் கூறியவர் ஔவையார் கூட திருக்குறளில் சொல்லுவார் என பேசியதால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon