5 நாட்களில் மூன்றாவது சிறுத்தை கூண்டில் சிக்கியது..!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 5 நாட்களில் மூன்றாவது சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது. குடியிருப்பு மற்றும் வேம்பையாபுரம் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை வேட்டையாடியது.
இதையடுத்து வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. அதனை மணிமுத்தா ஆராய்ச்சியில் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். மேலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அனுமன் குடியிருப்பு பகுதியில் நான்கு கூண்டுகள் வைக்கப்பட்ட நிலையில் நேற்று இரண்டாவதாக சிறுத்தை பிடிபட்டது.
இந்த சூழலில் வேம்பையாபுரம் பகுதியில் மூன்றாவது சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது. அதனை அடர்ந்த வனப்பகுதியில் விடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் காரணமாக பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மீண்டும் சிறுத்தைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





